Sunday 30 August 2015

பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாது



மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 11 மத்திய  சங்கங்களும் கலந்துகொண்டன. நமது BMS சங்கமும் அதில் கலந்துகொண்டது அதன்  முயற்சியால் பல்வேறு கோரிக்கைகள்  மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது . குறிப்பாக போனஸ் உச்சவரம்பு 3500 மற்றும் ஊதிய வரம்பு 10000 என்பதில் இருந்து 7000 மற்றும் 21000 ஆக உயர்த்த ஒப்புக் கொள்ளப்பட்டது .மேலும் பல கோரிக்கைகளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று   மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்ட காங்கிரஸ் , இடதுசாரிகள் அரசியலில் எப்போது எல்லாம் தோற்றுப்போகிறார் களோ அப்போது எல்லாம் அரசு ஊழியர்களை பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்வதும், எல்லா வருடமும் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்தி ஊழியர்களுக்கு சம்பளத்தை இழக்க வைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.மத்திய அரசுமீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் நடத்தும் SEP.2 வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வதில்லை என்று BMS மற்றும் அதன் இணைப்பு சங்கங்களும் முடிவு எடுத்துள்ளது .

No comments:

Post a Comment